உங்க சாகசத்த இப்படியா காட்டுவீங்க... ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த மாணவி
அரசு பள்ளி மாணவி ஒருவர் மின்சார ரயிலில் காலை உரசிக்கொண்டே பயணம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவி
சென்னையில் இயல்பாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தங்களின் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது பள்ளி மாணவி ஒருவர் ரயிலில் காலை உரசிக்கொண்டே பயணம் செய்யும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்தது.
அதிர்ச்சி வீடியோ
அதில் ஏறிய அரசு பள்ளி மாணவி ரயிலின் படிக்கட்டின் அருகே நின்றுள்ளார். பின் ரயில் செல்லத் துவங்கியபோது, அந்த மாணவி தன் காலை தரையில் உரசிக்கொண்டு நடைமேடை முடியும் வரை ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.
இந்த மாணவியின் ஆபத்தான செயல் காண்போரை அதிர்ச்சி அடையைச் செய்கிறது.
மேலும் ரயில் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் இத்தகைய செயலை கண்டித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.