தோனியின் 3வது படிக்கும் மகளின் பள்ளி கட்டனம் எவ்வளவு தெரியுமா - மிரளவைக்கும் தகவல்!
தோனி மகள் ஸிவாவின் பள்ளிக் கட்டணம் பற்றி தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி மகள்
இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி. சாக்ஷி என்பவரை காதலித்து 2010ல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2015ல் பெண் குழந்தை பிறந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கு தோனி தனது மகள் ஸிவாவை அழைத்து வரத் தொடங்கினார். சிறிய வயதிலேயே மில்லியன் கணக்கில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கொண்டுள்ளார் ஸிவா.
பள்ளி கட்டணம்
9 வயதாகும் ஸிவா, ராஞ்சியில் உள்ள பிரபல டாரியன் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.2.75 லட்சம் வசூல் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.23 ஆயிரம் பள்ளி கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
அதேபோல் பள்ளியின் போர்டிங் திட்டத்தில் ஸிவா இணைந்திருந்தால் ரூ.4.40 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை கேட்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.