“வா வா என் தேவதையே..பொன் வாய் பேசும் தாரகையே” - வைரலாகும் தல தோனி மற்றும் மகள் ஜீவாவின் க்யூட் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான வீடியோ என்றாலே சமூக வலைதளங்களில் வைரலாவதும் டிரெண்டாவதும் வழக்கமான ஒன்று.
அந்த வகையில் தற்போது மீண்டும் அவர் தொடர்பான வீடியோ ஒன்று தீயாக பரவி ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறது.
தோனி மற்றும் அவரது மகள் குறித்த க்யூட் வீடியோ தான் அது.
அந்த வகையில், சிஎஸ்கே ஃபேன்ஸ் பக்கத்தில் தோனி மற்றும் அவரது மகள் ஜிவா கொஞ்சிக்கொண்டு விளையாடும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது.
மேலும், அந்த வீடியோ ஓரியோ பிஸ்கட் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சிஎஸ்கே ஃபேன்ஸ் பக்கத்தில், “ஆஹா!! தல & ஜிவாவின் சூப்பர் அழகான வீடியோ !!! அடுத்த ஓரியோ விளம்பரத்தில் சிறந்த அப்பா,மகள் ஜோடி இடம்பெறுகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.