உடல் பருமன், மாணவர்களிடம் தொப்பை அதிகரிப்பு - ஆய்வில் பகீர் தகவல்!
மாணவர்களிடம் உடல் பருமன் மற்றும் தொப்பை அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அப்பல்லோ ஆய்வு
சென்னை அப்பல்லோ மருத்துவமனை 2022ல் 5 முதல் 17 வயதுடைய 1,124 மாணவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்பின், இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி அளித்த அறிக்கையில், சென்னையில் 5ல் 1 மாணவருக்கு உடல் பருமன் அதிகரிப்பு, தொப்பை அதிகரிப்பு இயல்பாகி விட்டது.
ஆய்வு நடத்திய 1,124 மாணவர்களில் 667 பேர் வழக்கமான எடை கொண்டவர்களாகவும், 237 பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 220 பேர் தொந்தி உடையவர்களாகவும் உள்ளனர்.
இதற்கு முன்னர் 5 வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வில் 0.1 சதவீதம் முதல் 11.7 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 2.7 சதவீதம் முதல் 25.2 சதவீதம் வரை உள்ளவர்கள் தொப்பை உடையவர்களாகவும் இருந்தனர்.
நீங்க ரொம்ப குண்டா இருக்கீங்களா? டயட்டே இல்லாமல் ஈசியா எடையை குறைக்கனுமா - இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க!
ஆனால் தற்போது தொப்பை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. இதனை சரி செய்யாமல் விட்டால் அடுத்த தலைமுறையினர் பாதிப்புக்குள்ளாகுவார்கள். இதனால் இளம் வயதிலேயே சக்கரை நோய் மற்றும் இதய பிரச்சனை அதிகரிக்கும்.
மாணவர்களிடம் உடல் பருமன் மற்றும் தொப்பை அதிகரிக்க காரணங்கள்:
உடற்பயிற்சியின்மை, கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்கள் அதிகம் உண்ணுதல், செல்போன், டிவி,கம்ப்யூட்டர் போன்ற பொருட்களின் அதிக பயன்பாடு, நடைப்பயணத்தைத் தவிர்த்து வாகனங்களை பயன்படுத்துதல், பள்ளி மதிப்பெண் காரணத்தினால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி இல்லாதது போன்றவற்றால் மாணவர்களின் BMI (body mass index) அதிகரித்துள்ளது.
இதனால் மாணவர்களின் வளர்ச்சிக்குப்பின் சக்கரைநோய், இதய பிரச்சனைகள், மூளை பாதிப்பு, முன்கூட்டியே இறப்பு போன்றவை அதிகமாகலாம்.
இதற்கான தீர்வுகள்:
உடற்பயிற்சி, மாணவர்களிடம் நடைப்பயிற்சி அதிகரிப்பு, அதிக கொழுப்பு மற்றும் துரித உணவுகளை தவிர்த்தல், செல்போன் போன்ற மின் சாதனங்களின் உபயோகிப்பு குறைத்தல், மிதிவண்டியை பயன்படுத்தல், சத்தான உணவினை உட்கொள்ளுதல் போன்றவை அன்றாட வாழ்க்கையில் பழக்கப்படுத்தி கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.