உடல் எடை அதிகரிக்க இவையெல்லாம் தான் காரணமாம்? தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்...
உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருவதற்கு மாறி வரும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நம் முன்னோரின் உணவுப் பழக்கவழக்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு வேளைக்கும், ஒவ்வொரு வகை உணவு என உடல் நலனுக்கு நன்மை தரும் வகையில் அமைந்திருந்தன.
அவை பசிக்கு உணவாக மட்டுமின்றி, ஊட்டச்சத்து தரும் வகையிலும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் மருந்தாகவும் அமைந்திருந்தது. தற்போது பெரும்பாலோர் துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி விட்டனர்.
பல இடங்களில் வீட்டில் உணவைச் சமைக்காமல் துரித உணவுக்கு செல்லிடப் பேசி செயலி மூலம் வரவழைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
ட்ஸா,பேர்கர், உருளைக் கிழங்கு சிப்ஸ், பேக்கரி பொருள்கள் போன்றவற்றின் மீதான ஆர்வமும் அதிகரித்து விட்டது. இவை உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவித நோய்களை அளிப்பவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் பெரும்பாலானோர் பொருட்படுத்துவதில்லை.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய வியாதிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் முதலான பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உண்டு; மனரீதியான பிரச்சினை-கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது
திடீரென்று உடல் எடை அதிகரிக்க இவைகளெல்லாம்தான் காரணமாக உள்ளன. அவற்றை விரிவாக பார்ப்போம்
மன அழுத்தம்
உடல் எடை திடீரென்று அதிகரிக்க மன அழுத்தம் மிக முக்கிய காரணியாக உள்ளது. இன்றைய வாழ்க்கை சூழலில் எல்லோருக்குமே மன அழுத்தம் உள்ளது. மன அழுத்தம் நம்மை அறியாமல் அதிக உணவு சாப்பிடத் தூண்டும். இதன் காரணமாக அதிக உணவு உட்கொண்டு உடல் பருமன் ஏற்படுகிறது.
மாத்திரை, மருந்துகள்
சில வகையான மாத்திரை, மருந்துகள் எடுப்பது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்க மாத்திரைகள் எடுப்பதற்கு முன்பு உடல் எடை தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ஜங்க் ஃபுட்
ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த உணவில் உள்ள ரசாயனங்கள், கார்போஹைட்ரேட், கொழுப்பு என எல்லாம் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. ஜங்க் ஃபுட் எடுக்கும் நாட்களில் கூடுதலாக உடற்பயிற்சி செய்வது நல்லது.
ஜூஸ்
அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ், மில்க் ஷேக், கார்பனேட்டட் குளிர் பானங்கள் அருந்துவது உடல் எடை திடீரென அதிகரிக்கச் செய்து விடும். சுவையாக இருந்தாலும் அதிகம் சர்க்கரை சேர்ப்பதால் இவை உடல் நலத்துக்கு கேடாக மாறிவிடும்.
ஃபுட் அடிக்ஷன்
சிலருக்கு எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். இதை ஃபுட் அடிக்ஷன் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த எண்ணம் வந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கச் செய்து விடுமாம்.
ஹார்மோன் சமச்சீரின்மை
ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும்போது உடல் எடை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டுக் கொழுப்பு அதிக அளவில் சேகரிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி, யோகா
உடல் பருமனிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்வதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்திவிடலாம்.