கடவுள் இருகாரா..இல்லையா? பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி - எழுந்த சர்ச்சை!

United States of America Viral Photos World
By Swetha Aug 28, 2024 04:01 AM GMT
Report

பள்ளில் அசைன்மென்ட்காக கொடுக்கப்பட்ட கேள்விகளை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 பள்ளியில்..

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டுப்பாடம் செய்து வரும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.

கடவுள் இருகாரா..இல்லையா? பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி - எழுந்த சர்ச்சை! | School Assignment Questions Made Parents Shock

அதில் உள்ள கேள்வியை ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுக்கப்பட்டன. அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த கேள்வியை, ஒரு மாணவியின் தாயார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதில் இடம்பெற்ற கேள்விகள் பின்வருமாறு: உலகம் உருவானது எப்படி? அதனை உருவாக்கியது யார்? எப்போது தீமை தோன்றியது.

ஹே எப்புட்றா..? 200-க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி - இப்படியும் ஒரு பள்ளியா?

ஹே எப்புட்றா..? 200-க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி - இப்படியும் ஒரு பள்ளியா?

கேட்ட கேள்வி

இப்போதும் உள்ளதா? ஒழுக்கம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? கிறிஸ்துவம் என்றால் என்ன? கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன? கடவுள் இருக்காரா? இல்லையா? சாத்தான் இருப்பது உண்மையா? நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக்கொண்டனரா?

கடவுள் இருகாரா..இல்லையா? பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி - எழுந்த சர்ச்சை! | School Assignment Questions Made Parents Shock

என இதுபோன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்ட். உலக வரலாற்றில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சித்தாள் என்கின்றனர். இது மிகவும்அற்பத்தனமானது என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவைக் கண்ட சமூகதள வாசிகள் அப்பள்ளியையும், கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த கேள்வி தாள் இணைய தளத்தில் பேசுபொருளான நிலையில், இது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அப்பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.