மிஸ் இந்தியா அழகி.. 2 மணி நேரம் மிரட்டி வீடியோ கால் - இறுதியில் மர்ம நபர் செய்த சம்பவம்!

Uttar Pradesh India Social Media
By Swetha Dec 07, 2024 08:30 AM GMT
Report

மிஸ் இந்தியா அழகியிடம் நபர் ஒருவர் 2 மணி நேரம் வீடியோ காலில் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ் இந்தியா 

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள மான்ஸ் நகரை சேர்ந்தவர் ஷிவாங்கிதா தீட்சித். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் பெங்காலின் ஃபெமினா மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். அண்மையில், அவருக்கு அடையாளம் தெரியாத அன் நவுன் நம்பரில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது.

மிஸ் இந்தியா அழகி.. 2 மணி நேரம் மிரட்டி வீடியோ கால் - இறுதியில் மர்ம நபர் செய்த சம்பவம்! | Scammers Video Call To Miss India Beauty Queen

அழைப்பை எடுத்து பேசிய ஷிவாங்கிதாவிற்கு எதிர்முனையில் ஒரு மர்ம நபர் பேசியிருக்கிறார். அவர் தான் ஒரு சிபிஐ அதிகாரி அடையாளம்படுத்தி இருக்கிறார். டெல்லியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.

அப்போது, மனித கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டு அதன் மூலம் அபகரிக்கும் பணம், தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி ஷிவாங்கிதாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆனால தான் அப்படி எந்தவொரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்திருக்கிறார். பதிலுக்கு அதட்டும் குரலோடு பேசிய மர்ம நபர், அதற்கான உரிய ஆதாரம் இருப்பதாக கூறி தங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உள்ளதாகவும்

விரைவில் வீட்டிற்கு அதிகாரிகள் வரவிருப்பதாகவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் இருந்த ஷிவாங்கிதா அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் திடீரென்று அவருக்கு வீடியோ காலில் அழைப்பு வந்துள்ளது.

இளம்பெண்ணை மிரட்டி ஆடையின்றி வீடியோ கால்; தம்பியிடம் பணம் பறிப்பு - தேனியில் பகீர் சம்பவம்!

இளம்பெண்ணை மிரட்டி ஆடையின்றி வீடியோ கால்; தம்பியிடம் பணம் பறிப்பு - தேனியில் பகீர் சம்பவம்!

 வீடியோ கால்

கட் செய்தால் தன் மீது தவறு இருக்கும் என நினைத்துவிடுவார்களோ என்று எண்ணி அழைப்பை எடுத்துள்ளார். மறுமுனையில் சிபிஐ அதிகாரி போல உடை அணிந்து மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். ஷிவாங்கிதா குறித்த லேசான தகவல்களை திரட்டி அதை வைத்து மிரட்ட ஆரம்பித்தார்.

மிஸ் இந்தியா அழகி.. 2 மணி நேரம் மிரட்டி வீடியோ கால் - இறுதியில் மர்ம நபர் செய்த சம்பவம்! | Scammers Video Call To Miss India Beauty Queen

தாங்கள் செய்த குற்றத்திற்குப் பல வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும், தங்களோடு கூட்டு சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களையும் பிடிக்க உள்ளோம் என கூறி அச்சுறுத்தினார்.

மேலும் கைது செய்வதற்கான அரசின் ஆணை கையில் உள்ளது எனக்கூறி போலி ஆவணங்களைக் காட்டி ஷிவாங்கிதாவை நம்ப வைத்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் தங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் அரசுக்கு அபராதம் கட்ட வேண்டும் என கூறி ஷிவாங்கிதாவிடம் பணம் பறிக்க தொடங்கினர்.

பணத்தை கொடுத்து விட்டால் பிரச்சினை முடிந்துவிடும் என நினைத்து மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு 99ஆயிரத்தை அனுப்பி உள்ளார். சுமார் 2 மணி நேரம் நீடித்த வீடியோ காலுக்கு இடையில் ஷிவாங்கிதாவின் தந்தை கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரம் கழித்து கதவை திறந்ததால் சந்தேகமடைந்த தந்தை, ஷிவாங்கிதாவிடம் இதை பற்றி கேட்டார். நடந்த அனைத்தையும் கூறி அழுதிருக்கிறார். அப்போதுதான் தனது மகள் மோசடி நபர்களிடம் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து போலீசீல் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.