இளம்பெண்ணை மிரட்டி ஆடையின்றி வீடியோ கால்; தம்பியிடம் பணம் பறிப்பு - தேனியில் பகீர் சம்பவம்!
இளம்பெண்ணை மிரட்டி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மர்ம நபர்
தேனியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டே டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதற்காக அவர் டெலிகிராம் செயலியில் போட்டித் தேர்வு தொடர்பான ஒரு குழுவில் இணைந்துள்ளார். அதே டெலிகிராம் குழுவில் தளபதி என்ற பெயரில் ஒருவர் இருந்துள்ளார்.
இந்த நபர் அந்த பெண்ணுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பி நட்பாக பழகியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல் போன்ற விவரங்களை பெற்றுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் நிர்வாணமாக தன்னுடன் வீடியோ காலில் பேச சொல்லியுள்ளார். இல்லையென்றால் புகைப்படங்களை நிர்வாணமாக மார்ப்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் அந்த இளம் பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் பயத்தில் அந்த பெண்ணும் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதை போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து மீண்டு அந்த பெண்ணை மிரட்டி வீடியோ கால் செய்ய சொல்லியுள்ளார். மேலும், அந்த பெண்ணின் சகோதரனுக்கு மெசேஜ் செய்து ரூ. 2 லட்சம் தராவிட்டால் 'உனது சகோதரியின் வீடியோவை வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண்ணின் சகோதரன் முதல் தவணையாக ரூ.100 இரண்டாவது தவணையாக ரூ.2,000 அனுப்பியுள்ளார்.
கைது
இதனால் அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தனிப்படை அமைத்து அந்த மர்ம நபரை தேடி வந்த சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார் (28) என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட யோகேஷ்குமாரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், யோகேஷ்குமார் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளம் பெண்களுக்கு உதவி செய்வது போல் பழகி அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது .