வாட்ஸ் அப்-பை குறிவைக்கும் ஸ்கேம்மர்ஸ்.. இந்த எண்களில் மெசேஜ் வந்தால் உஷார் - ஆய்வில் தகவல்!

WhatsApp United States of America World
By Vinothini Aug 29, 2023 06:53 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சில நாட்களாக மோசடி கும்பல் வாட்ஸ் அப்-பை குறிவைத்து வருவதாக புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

மோசடி கும்பல்

சமீப காலங்களில் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து அழைப்பு வருகிறது என்று பயனர் எண்ணும் வகையில் செய்திகளும் அழைப்புகளும் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் மோசடி செய்பவர்கள் முக்கிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்து அழைப்பது போல் நடித்து ஏமாற்றி வருகின்றனர்.

scammers-alert-through-whatsapp

இதற்கு சில முக்கிய அமெரிக்க மாநிலங்களின் குறியீடுகளை குறிக்கும் வகையில் போலி தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் அட்லாண்டா மாகாணங்களுக்கான +1 (404) மற்றும் சிகாகோவிற்கான +1 (773) போன்ற தொலைபேசி எண்களில் இருந்து தொடங்கும் அழைப்புகள் மோசடியானதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்

இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ததில் நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான அளவிற்கு வாட்ஸ்அப்பில் குறிவைக்கப்பட்டுள்ளனர். மோசடி அழைப்புகள் என சந்தேகித்து பாதிக்கப்பட்டவர் போனை எடுக்காவிட்டாலும், "இதைப் பார்க்கும்போது எனக்குப் பதில் சொல்லுங்கள். நன்றி" போன்ற செய்திகள் அனுப்பி ஏமாற்றுகின்றனர்.

scammers-alert-through-whatsapp

அதனால் எந்த தனிப்பட்ட தகவலையும் வெளியிடுவதற்கு முன்பு பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்துகிறது. மோசடி அழைப்புகள் குறித்து புகார் அளியுங்கள். பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் போது, ​​குறிப்பாக முக்கியமான பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.