மசோதாக்கள் குறித்து கவர்னர் முடிவு..!! எச்சரிக்கை செய்த உச்சநீதிமன்றம் !!
தொடர்ந்து பல எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னர்களால் பிரச்சனை இருப்பதாக அந்தந்த மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கவர்னர் - மாநில அரசு முரண்பாடு
பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க என எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் தொடர்ந்து கவர்னர்கள் மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் பல மசோதாக்களை கவர்னர்கள் நிறைவேற்றாமல், காலம் தாழ்த்தி வருவதாக தொடர் குற்றசாட்டுக்கள் எழுகின்றன.
இந்நிலையில், தான் கேரளா அரசு உச்சநீதிமன்றத்தை கவர்னருக்கு எதிராக நாடியுள்ளது. அந்த மனுவில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் பொது சுகாதார மசோதாவை தவிர்த்து மற்ற 7 மசோதாக்களும் ஜனாதிபதியிடம் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது அனுப்பிவைத்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டி, மசோதாக்களை காலம் தாழ்த்தவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கவர்னர் செயல்படுகிறார் என்று கேரள அரசின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
இன்று விசாரிக்கப்பட இந்த மனுவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், இவ்வாறு 8 மசோதாக்கள் மீதும் கவர்னர் முடிவு எடுத்திருப்பதை கவனத்தில் கொண்டு, மாநில அரசின் மனுவில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தனர்.
அத்துடன் இந்த விஷயத்தில் முதல்-மந்திரி மற்றும் மசோதாக்கள் தொடர்புடைய மந்திரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
சில அரசியல் சாமர்த்தியத்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமை