தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தா சவுக்கு சங்கர்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Government of Tamil Nadu Supreme Court of India
By Karthick Jul 15, 2024 10:37 AM GMT
Report

பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், கைதாகி சிறையில் உள்ளார்.

விசாரணை

கடந்த ஜூலை 15-ஆம் தேதி சவுக்கு சங்கர், கைதாகி சிறையில் உள்ளார். அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. இதனை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்திருந்த மனு நிலுவையில் உள்ளது.

Savukku sankar

அவர் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். அம்மனு இன்று விசாரணைக்கு நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, சவுக்கு சங்கர் பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தவிரும்பவில்லை என குறிப்பிட்டு, இவ்வாறு பேசுவதையே அவர் வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசி தந்தார் என்றார்.

நீதிபதிகள் கேள்வி

சங்கர் சார்பில் ஆஜரான சித்தார்த்தா டேவ் வாதாடும் போது, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்தி வைக்கிறது. அவசரம் கருதி வழக்கை விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொய் வழக்குகள் போடும் கவனம் கள்ளச்சாராயத்தில் இருந்திருக்கலாம் - கூச்சலிட்ட சவுக்கு சங்கர்!!

பொய் வழக்குகள் போடும் கவனம் கள்ளச்சாராயத்தில் இருந்திருக்கலாம் - கூச்சலிட்ட சவுக்கு சங்கர்!!

வாதங்களை கேட்ட நீதிபதிகள், கடுமையாக அல்லாமல், சரியாக நடந்து கொள்ளவேண்டும் என கூறி, தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தாரா சவுக்கு சங்கர் என வினவினார்கள். மேலும், அவரின் நடத்தை மன்னிக்க முடியாத ஒன்று தான்.

Supreme court

அதே நேரத்தில் அவருக்கு ஏன் இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது என தமிழக அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். வழக்கு ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.