பொய் வழக்குகள் போடும் கவனம் கள்ளச்சாராயத்தில் இருந்திருக்கலாம் - கூச்சலிட்ட சவுக்கு சங்கர்!!
கள்ளச்சாராய மரணங்கள்
தமிழகத்தை உலுக்கியுள்ளது கள்ளக்குறிச்சி மரணம். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அமைச்சர்களில் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்ரமணியன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.
கையாலாகாத தனம்
இந்நிலையில் தான் சிறையில் இருக்கும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் புதுக்கோட்டை ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து காவலர்கள் அவரை சிறைக்கு அழைத்து சென்ற போது, காவல்துறை பொய் வழக்குகள் போவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் செலுத்தியிருந்தால் 33 உயிர்கள் போயிருக்காது என கூச்சலிட்டார் சவுக்கு சங்கர்.
மேலும், அரசியல் எதிரிகளை பழிவாங்கவே பயன்படுகிறது தமிழக காவல்துறை என்றும் தமிழக முதல்வரின் கையாலாகாத தனத்தால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கமிட்டார்.