காவல்துறை முறையாக பணியாற்றிருந்தால்....நியாப்படுத்த விரும்பவில்லை!! அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி விவகாரம்
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகின்றது.
தமிழக அரசும் மருத்துவ பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், அண்மையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் போன்றோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
காவல்துறை கவனமாக..
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை என்று கூறி, இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என கூறினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்...பலியானோருக்கு தலா ரூ.1 லட்சம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!
தொடர்ந்து பேசியவர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் முறையாக பணியாற்றி இருந்தால் இப்படி நடந்திருக்காது என சுட்டிக்காட்டி, அதன் காரணமாக மாவட்ட எஸ்பி'யை உடனடியாக சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
மேலும், மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டுள்ளார். எஸ்.பி மட்டுமின்றி துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.