சின்னம் தொடர்பாக சீமானின் வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அதிரடி கேள்வி..?
நாம் தமிழர் கட்சி சின்னம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம்
நாம் தமிழர் கட்சி கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் அரசியலில் போட்டியிட்டு வருகின்றது. 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2019-ஆம் நாடாளுமன்ற தேர்தல், 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டது.
அதே போல உள்ளாட்சி தேர்தல்களிலும் அக்கட்சி இந்த சின்னத்தையே பயன்ப்படுத்தியது. இன்னும் அங்கிகாரம் பெறவில்லை என்றாலும், அக்கட்சியின் சின்னமாகவே இது மாறியது. 1 சதவீத வாக்குகளில் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 6.58% வாக்குகளை பெற்றனர்.
தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், நாம் தமிழர் இந்த தேர்தலில் 8 % வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் வாங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
நீதிமன்றம் கேள்வி
அக்கட்சி தற்போது தமிழகத்தில் தாங்கள் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது மட்டுமின்றி, எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் சின்னத்தை நாம் தமிழருக்கு அளிக்கிறோம் என்றும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏன் நாம் தமிழர் கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பிய நீதிமன்றம், மனு மீது பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.