கூட்டணிக்கு வாங்க சின்னத்தை தருகிறோம் - சீமானுக்கு அழைப்பு விடுக்கும் BAP கட்சி

Naam tamilar kachchi Seeman
By Karthick Mar 14, 2024 08:04 AM GMT
Report

கரும்பு விவசாயி சின்னம் பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் யோகி ஆர்.கே.ஜெயக்குமார் சீமானிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம்

நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்த கரும்பு சின்னம், கர்நாடகத்தை அடிப்படையாக கொண்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

bap-party-calls-for-alliance-with-seeman

எங்கள் மாநிலத்தில் எங்களுக்கு அந்த சின்னத்தை ஒதுக்குங்கள் என கோரிக்கை வைத்து வருகிறது நா.த.க. இந்த சூழலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் தலைவர் யோகி ஆர்.கே.ஜெயக்குமார் பேசியது வருமாறு,

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கல'னா - இது தான் என்னோட பிளான்..? சீமான் அதிரடி

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கல'னா - இது தான் என்னோட பிளான்..? சீமான் அதிரடி

தேர்தல் ஆணையம் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். கட்சி துவங்கி அறிமுகமாகும் போது, சொற்ப வாக்குகள் தான் பெறுவார்கள். நாங்கள் வளர்ச்சியடைவோம். சின்னத்தை நாங்கள் வாங்கியது கூறுவது ஏற்புடையதல்ல.

கூட்டணிக்கு வந்தால்

தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம் அவர்கள் அளித்தார்கள். 6 மாதத்திற்கு முன்பு சின்னத்திற்காக விண்ணப்பித்த நிலையில், 1 மாத்திற்கு முன்பு தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னத்தை ஒதுக்கியது. கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா, ஒடிசா போன்ற 7-8 மாநிலங்களில் போட்டியிட கட்சி தயாராக உள்ளது. குறைந்தபட்சமாக நாட்டில் 100 வேட்பாளர்களை களமிறக்குவோம்.

விவசாயி சின்னம் உங்களுக்கு ராசியில்லை - நீதிபதி அட்வைஸ் - அதிர்ந்த சீமான்

விவசாயி சின்னம் உங்களுக்கு ராசியில்லை - நீதிபதி அட்வைஸ் - அதிர்ந்த சீமான்

தம்பி சீமான் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு கரும்பு - விவசாயி சின்னத்தை அளிக்க தயார். இது வரை கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை. வந்தால் வரவேற்போம். எங்களுடைய அடிப்படை சித்தாந்தம் விவசாயியை கொண்டது என்பதால் தான் விவசாயி சின்னத்தை பெற்றோம்.

bap-party-calls-for-alliance-with-seeman

சின்னத்தை வைத்து எங்களுக்கு வாக்கு இல்லை, நாங்கள் தான் எங்களுடைய வாக்கு என கூறும் சீமானுக்கு எதற்கு பயம். தமிழகத்தை பொறுத்தமட்டில் நாங்கள் வாக்கு சதவீதத்தை அடிப்படையில் 3 அல்லது 4வது இடத்திற்கு வருவோம். சீமான் இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.