கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கல'னா - இது தான் என்னோட பிளான்..? சீமான் அதிரடி

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Karthick Feb 17, 2024 08:38 AM GMT
Report

தேர்தலில் சின்னம் பெறுவது தற்போது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சின்னம் பிரச்சனை

தமிழகத்தில் கரும்பு - விவசாயி சின்னத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றது நாம் தமிழர் கட்சி.

seeman-talks-about-getting-chinnam-for-party

2016, 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல், 2021-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டுள்ள அக்கட்சிக்கு தற்போது சின்னம் கிடைப்பது சற்று சிக்கலாக இருக்கின்றது.

என்ன செய்யப்போகிறது நா.த.க..? கை நழுவிய சின்னம்..? இருக்கும் ஒரே வாய்ப்பு..!

என்ன செய்யப்போகிறது நா.த.க..? கை நழுவிய சின்னம்..? இருக்கும் ஒரே வாய்ப்பு..!

சீமான் பேட்டி

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சின்னம் நிச்சயம் கிடைக்கும் என கூறி, எங்கள் மாநிலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்களுக்கான சின்னத்தை ஒதுக்கவேண்டும் என கூறினார்.

seeman-talks-about-getting-chinnam-for-party

மற்ற மாநிலங்களில் தாங்கள் போட்டியிட்டாலும் அப்போது வேறொரு சின்னத்தை அளிக்கலாமே தவிர, இங்கு தங்களுக்கான ஒதுக்கவேண்டும் என தான் நீதிமன்றத்தில் கோருவேன் என்றார். தான் நிச்சயமாக விவசாயி சின்னத்தை பெறுவேன் என் கூறி, நீங்கள் நம்பிக்கையாக இருங்கள் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.