பொன்முடியின் தண்டனை - முன்னாள் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..!

Supreme Court of India K. Ponmudy
By Karthick Jan 29, 2024 06:54 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொன்முடி வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைவாசமும், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

sc-order-in-ex-minister-ponmudi-case-

மேலும், 3 மாதங்கள் தண்டனையை நிறுத்திவைத்து, இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, மேல்முறையீடு செய்த பொன்முடி, வழக்கின் விசாரணையில் இருந்து நேரில் ஆஜராக விலக்கும் கோரியிருந்தார்.

அமைச்சர் பொன்முடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

அமைச்சர் பொன்முடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

மறுப்பு

அதனை தொடர்ந்து பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

sc-order-in-ex-minister-ponmudi-case-

மேலும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க பொன்முடி தரப்பு கோரியிருந்த நிலையில், அதற்கும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.