இபிஎஸ் 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு - உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!!

Edappadi K. Palaniswami Supreme Court of India
By Karthick Nov 29, 2023 06:42 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டெண்டர் வழக்கு 

2016 முதல் 2021ஆம் ஆண்டு ஆட்சியில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ஆம் ஆண்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார்.

sc-order-in-eps-tender-malpractice-case

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துவக்கத்தில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018-இல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது மட்டுமின்றி வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.

sc-order-in-eps-tender-malpractice-case

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜூலை மாதத்தில் ஆர்.எஸ். பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி அதிரடி

அதில் விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என குறிப்பிட்டு, உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 25-இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

sc-order-in-eps-tender-malpractice-case

அப்போது நீதிபதிகள், நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள் என்றும், ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளைச் சந்திப்பதில்லை எனக் கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.

திராவிட மாடல் அல்ல - தந்திர மாடல் அரசு இது..! இபிஸ் கடும் விமர்சனம்!!

திராவிட மாடல் அல்ல - தந்திர மாடல் அரசு இது..! இபிஸ் கடும் விமர்சனம்!!


நீதிபதி பெல்லா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் அமர்வு குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.