ஓய்வுபெற்று 5 மாசம் கழித்து தீர்ப்பு சொல்லுவாங்களா? நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிபதி மதிவாணன்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் டி.மதிவாணன். கடந்த 2017 மே மாதத்தில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில், அவர் விசாரித்து வந்த வழக்கு ஒன்றின் விரிவான தீர்ப்பு அதே ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜால் புயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், "5 வாரங்கள் அவகாசம் இருந்தும், 250 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான தீர்ப்பை நீதிபதி பதவி விலகி 5 மாதங்கள் கழித்து வெளியிட்டு இருக்கிறார்.
உச்சநீதிமன்றம் கண்டனம்
இதன் மூலம், நீதிபதி ஓய்வுபெற்ற பிறகும், தனக்கென சில காரணங்களை வைத்துக்கொண்டு இந்த தீர்ப்பை தயார் செய்திருப்பது தெளிவாகிறது. ஒரு நீதிபதி பதவி விலகிய பிறகு 5 மாத காலம் வழக்கின் கோப்பை வைத்திருப்பது முறைகேடான ஒன்றாகும். இதை எங்களால் அனுமதிக்க முடியாது.
நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நீதி கிடைப்பது தெரியவும் வேண்டும்" எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்ற பின்னர் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழக்குகளை மறுபரிசீலனைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அனுப்ப விரும்புகிறோம்.
சர்ச்சைகளுக்காக இந்த தீர்ப்பை வழங்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்." என கண்டனம் தெரிவித்து ரத்து செய்தனர்.