அவதூறு வழக்கு - தோனிக்கு அதிரடியாக ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றம்..!
ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு பதில் தர உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆணை
2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டிற்கும் எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாக தோனி குற்றம் சாட்டினார். இந்த
வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டில், இன்று உச்சநீதிமன்றம் தோனிக்கு ஆணையை பிறப்பித்துள்ளது.
இதில், சம்பத் குமாரின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தோனி பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.