22 வருடமாக நாடே தேடியவர் - தமிழ் பெண்ணுக்கு தாலி கட்டி மர்ம வாழ்வு !! சிக்கிய அதிரடி பின்னணி?
22 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் ஒரு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சலபதி ராவ்
சலபதி ராவ் எனப்படும் இவர், தற்போதைய தெலுங்கானா மாவட்டத்தில் இருக்கும் ஹைதராபாத்தில் SBI வங்கியில் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தாராம். அப்போது, எலெக்ட்ரானிக் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி தனது குடும்ப நபர்களின் பெயரை உபயோகித்து போலியான சம்பள பட்டியலை தயார்படுத்தி சுமார் 50 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக, 2002-ஆம் ஆண்டே சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு 2004-ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு அவரின் மனைவி சலபதி ராவை 7 ஆண்டுகளாகவே காணாததால், அவர் இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
துரத்திய சிபிஐ..
சிபிஐ தரப்பில் இது குறித்து பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. 2013-ஆம் ஆண்டு அவரை தேடும் குற்றவாளியாக அறிவித்தது சிபிஐ. அவரின் சொத்துக்களை கைப்பற்ற சிபிஐ முயன்ற போது, அவரின் மனைவி வழக்கு தொடுத்து நிறுத்தியுள்ளார்.
பல மாநிலங்களில் மறைமுகமாக வாழ்ந்து வந்த சலபதி ராவ், தமிழகத்தில் வினீத் குமார் என்ற பெயரில் பதுங்கி இருந்தது மட்டுமின்றி, சேலத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தும் வாழ்ந்து வந்துள்ளார். அவர் அடையாள ஆவணங்களையும் பெற்று இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தின் ஆசிரமம் ஒன்றில் விதித் மானதா தீர்த்தா என்ற பெயரில் சாமியாராகவும் மறைமுகமாக வாழ்ந்து வந்த இவர், அதே பெயரிலும் ஆதார் கார்டு ஒன்றை பெற்றுள்ளார். ஆசிரமத்தில் இருந்து 70 லட்சம் ரூபாயை சுருட்டியுள்ளார் சலபதி ராவ். தலைமறைவாக இருந்த போதிலும், முதல் மனைவியின் முதல் மகனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
ஆதார் கார்டு புதிதாக பெற்ற போதிலும், அவர் எதற்கும் ஈமெயில் ஐடி'யை மாற்றவில்லை. இதனை வைத்தே கைது செய்துள்ளது சிபிஐ. நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூரில் நண்பர் ஒருவர் வீட்டில் இருந்த அவரை சிபிஐ அதிகாரிகள் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.