தூத்துக்குடி துப்பாக்கி சூடு; சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறவில்லை - உயர் நீதிமன்றம் அதிருப்தி

Thoothukudi Central Bureau of Investigation Madras High Court
By Karthikraja Jul 15, 2024 02:00 PM GMT
Report

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி

2018ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து, காவல் அதிகாரிகள் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. 

thoothukudi shooting

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

சிபிஐ விசாரணை

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? யார் பொறுப்பேற்பார்கள்” எனக் கேள்வி எழுப்பினர். 

madras high court

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவத்தில் அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தூரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்க எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என்று எப்படி அறிக்கை அளிக்க முடியும். இத்தனை ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடத்தியும் பலன் இல்லை” என்று கருத்து தெரிவித்தனர். மேலும், 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்த போது, அங்கு ஏதேனும் வன்முறை நிகழ்ந்ததா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கினை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.