உங்களுக்கே தெரியாமல் பேங்க் கணக்கில் ரூ.295 எடுக்குறாங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க..
வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வங்கி கணக்கு
சேமிப்பு கணக்கின் கீழ் நல்ல லாபம் வழங்குவதால் பெரும்பாலானோர் SBI வங்கி சேமிப்பு திட்டங்களில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், SBI வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போரின் வங்கி கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.295 எடுத்துக்கொள்வதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
SBI விளக்கம்
மேலும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் போது எந்தவித அறிவிப்பும் வரவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, தற்போது SBI வங்கி EMI மூலமாக வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கும் போது EMI தேதிக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே வங்கி கணக்கில் அதற்கான பணம் இருக்க வேண்டும்.
இவ்வாறு, ஒரு நாளைக்கு முன்பாக வங்கி கணக்கில் போதிய பணம் இல்லையென்றால் National Automated Clearing House (NACH) மூலமாக பணம் பிடிக்கப்படும். அதற்கான, பணம் தான் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.