சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி - தற்போதைய நிலை என்ன?
நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.
மருத்துவமனையில் அனுமதி
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தும், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக சவுக்கு சங்கர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ரத்த நாளத்தில் இருந்த அடைப்புக் காரணமாக ஆஞ்ஜியோ ப்ளாஸ்ட் சிகிச்சை மூலமாக ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.