சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் மீண்டும் கைது - என்ன காரணம்?
சவுக்கு சங்கர் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர்
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
16 காவல் நிலையங்களில், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரியும், இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, சவுக்குசங்கர் நீதிபதிகளுக்கு எதிராகவும்கூட அவதூறு கருத்துக்களை பரப்பியவர்.
அரசு விளக்கம்
நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர் எனக் கூறியவர் என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த சங்கர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன், சவுக்கு சங்கர் தொடர்பான ஒரேகாணொளி பல தருணங்களில்ஒளிபரப்பப்பட்டதற்காக 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ஏற்கெனவே நிலுவை வழக்குடன் இந்த வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான அனைத்து எப்ஐஆர்-களையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க முடியாது. ஒவ்வொரு எப்ஐஆரும் வேறு விதமாக உள்ளன.
அதேநேரம் அவரை மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது ஏன் என்பது குறித்தும், அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக ஏன் விசாரணை செய்யக்கூடாது என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.2-க்கு தள்ளி வைத்தனர்.