சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..விசாரணையில் நீதிபதிகள் விலகல் - என்ன காரணம்?

Tamil nadu Madras High Court Social Media
By Swetha Jul 26, 2024 08:04 AM GMT
Report

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதிகள் விலகல்

பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..விசாரணையில் நீதிபதிகள் விலகல் - என்ன காரணம்? | Judges Withdrawn From Trial Of Savukku Sankar Case

இதை தொடர்ந்து, அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.

சவுக்கு சங்கருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10,000 இழப்பீடு? அரசுக்கு நீதிபதி கேள்வி!

சவுக்கு சங்கருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10,000 இழப்பீடு? அரசுக்கு நீதிபதி கேள்வி!

என்ன காரணம்?

அத்துடன், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த அடிப்படையில், இவ்வழக்கு இரண்டு பேர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..விசாரணையில் நீதிபதிகள் விலகல் - என்ன காரணம்? | Judges Withdrawn From Trial Of Savukku Sankar Case

அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக வேறொரு அமர்வு விசாரித்தது. அதற்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக மனுதாரர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

எனவே நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கிறோம். அவர் வேறு அமர்விற்கு வழக்கை மாற்றி விடுவார் எனக்கூறி வழக்கின் விசாரணையில் இருந்து விலகினர். எனவே இந்த வழக்கு வேறு அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.