அமைச்சர் உதயநிதிதான் காரணம்; திடீரென கத்திய சவுக்கு சங்கர் - பரபரப்பு!
என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4ம் தேதி தேனியில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நீலகிரி போலீசார் கோவையிலிருந்து சென்னைக்கு, அவரை வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக அழைத்து சென்றனர்.
பரபரப்பு சம்பவம்
அப்போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே “என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின்பேரில்,
என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.