15 நாட்கள் தரமுடியாது..சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை - நீதிமன்றம் அதிரடி!
சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவல் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சவுக்கு சங்கர் வழக்கு
பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதை தொடர்ந்து, அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் உதகை அருகே உள்ள புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லி ராணி என்பவர் அளித்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவரை கைது செய்த நீலகிரி மாவட்ட போலீசார் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன்
நீதிமன்றம் அதிரடி
உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ் இனியன் முன் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான அதிமுக வழக்கறிஞர்கள், சவுக்கு சங்கரை இதே போன்ற வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு,
அந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளதாகவும் எனவே நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கைது நடவடிக்கையை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்தனர்.அதனை ஏற்க மறுத்த நீதிபதி அந்த மனுவை நிராகரித்ததுடன் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை விசாரிக்க வேண்டியிருப்பதால் ஐந்து நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கரை நாளை மாலை வரை ஒரு நாள் மட்டுமே,
போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ள சவுக்கு சங்கரை 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். இதனையடுத்து சவுக்கு சங்கரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள் IBC Tamil
