உதயநிதி என்னை பார்த்து பயப்படுகிறார்..அதான் என் மீது பொய்வழக்கு - சவுக்கு சங்கர்!
உதயநிதி என்னை பார்த்து பயப்படுகிறார் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர்
பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதை தொடர்ந்து, அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.
உதயநிதி..
இந்நிலையில் ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாகவும், தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடுமாறும் சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், காவல் துறை கோரிக்கையை ஏற்று அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா,
என விளக்கமளிக்க காவல் துறை தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கபட்டது. முன்னதாக குழித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது சவுக்கு சங்கர் செய்தியாளர்களை பார்த்து, திமுக அரசு என்னை கண்டு அஞ்சுகிறது.
உதயநிதி ஸ்டாலின் என்னை கண்டு பயப்படுகிறார். அதனாலேயே என் மீது உள்ள பயத்தாலே திமுக தொடர் பொய் வழக்கு பாய்கிறது. அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்ய சதி நடக்கிறது என கோஷமிட்டபடி சென்றார்.