சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு..அரசு மருத்துவமனையில் அனுமதி!

Youtube Tamil nadu Chennai
By Swetha Jul 31, 2024 10:08 AM GMT
Report

சவுக்கு சங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்

பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு..அரசு மருத்துவமனையில் அனுமதி! | Savukku Sankar Falls Ill And Got Admit In Hospital

இதை தொடர்ந்து, அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

15 நாட்கள் தரமுடியாது..சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை - நீதிமன்றம் அதிரடி!

15 நாட்கள் தரமுடியாது..சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை - நீதிமன்றம் அதிரடி!

 உடல்நலக்குறைவு..

அதன்பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு..அரசு மருத்துவமனையில் அனுமதி! | Savukku Sankar Falls Ill And Got Admit In Hospital

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். சவுக்கு சங்கரை விசாரிக்க வேண்டியிருப்பதால் ஐந்து நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.அதற்கு நீதிபதி சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டுமே, போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.