சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு? அவரே சொன்ன தகவல்!
சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு உள்ளது என இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
எச்.ஐ.வி தொற்று
பெண் காவல் அதிகாரிகளை தவறாக பேசியது, கஞ்சா பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளிவந்த அவருக்கு கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
இதனிடையே சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவலை சவுக்கு சங்கர் மறுத்துள்ளார்.
சவுக்கு சங்கர்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கை தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது.
Announcement. pic.twitter.com/Gs9O7Mhst2
— Savukku Shankar (@SavukkuOfficial) October 29, 2024
திருடப்பட்ட மருத்துவ அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டு, நான் எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இந்த மருத்துவ அறிக்கை போலியானது. நான் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.