இந்த உண்மையை மறைக்கவே சவுக்கு மீடியா முடக்கப்பட்டது - சவுக்கு சங்கர் பரபரப்பு
மு.க.ஸ்டாலின் கலைஞரின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி என சவுக்கு சங்கர் பேசியுள்ளார்.
சவுக்கு சங்கர்
பெண் காவல் அதிகாரிகளை தவறாக பேசியது, கஞ்சா பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது.
குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்ட பின்னர் மற்றோரு குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டது. இந்த கூடினர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கரின் தயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சவுக்கு சங்கர் விடுதலை
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்ததோடு, இந்த வழக்கை தவிர வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லாதபட்சத்தில் அவரை விடுதலை செய்யலாம் என அறிவுறுத்தியது.
மதுரை மத்திய சிறையில் இருந்து யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் இல்லை. விமர்சனங்களை பார்த்து வளர்ந்தவர் இல்லை. தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி.
பணியிலிருப்பவர் இறந்தால் எப்படி கருணை அடிப்படையில் வேலை கொடுப்பார்களோ அதேபோல் கருணை அடிப்படையிலேயே அவருக்கு திமுக தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய மரணம்
சவுக்கு மீடியா 8 மாத காலமாக உண்மைகளை எடுத்து கூறியதாலே எனது தாய், தந்தை, சவுக்கு மீடியா உள்ளிட்ட அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. உண்மைகள் வெளிவந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மிக கவனமாக உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மெத்தனால் கடத்தப்பட்டது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறைக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே கடிதம் எழுதியுள்ளார். இதை தடுக்காவிட்டால் மரக்கான கள்ளச்சாராய சாவு மற்றோரு சாவு நடைபெறும் என எச்சரித்திருந்தார்.
சவுக்கு மீடியா
இந்த கடிதம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்காது. இதுபோன்ற பல உண்மைகள் மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
4 நாட்களுக்கு முன்பாக தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் மீது பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக பொது நல வழக்கு தொடர்ந்த ஊடகவியலாளர் வராகி கைது செய்யப்பட்டுள்ளார். வராகி மீதும் குண்டர் சட்டம் போட காவல் துறை திட்டமிட்டுள்ளது.
5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளேன். இன்னும் 3 மாதங்களில் சவுக்கு மீடியா பழைய வீரியத்துடன் இயங்கும்" என தெரிவித்துள்ளார்.