பெண் காவலர்கள் குறித்த வழக்கு - ஜாமீன் கோரிய சவுக்கு சங்கர் - கோவை நீதிமன்றம் அதிரடி
கைதான சவுக்கு சங்கர் மீது பல்வேறு புகார்களும், வழக்குகளும் அளிக்கப்பட்டன.
கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4ம் தேதி தேனியில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதானவர் மீது தொடர்ந்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் துவங்கி பல்வேறு நீதிமன்றங்களில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன்
கோவை மாவட்ட நீதிமன்றத்தில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் பதிந்திருந்த வழக்கில் ஜாமீன் கோரியிருந்தார் சவுக்கு சங்கர்.
பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி, உத்தரவிட்டுள்ளது கோவை மாவட்ட நீதிமன்றம்.
முன்னதாக, குண்டர் சட்டத்தில் இருந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருந்தார் சவுக்கு சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.