சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம் - உச்சநீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து அவரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தீர்ப்பு
அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சவுக்கு சங்கரின் தாயார் சார்பில், இது சவுக்கு சங்கரின் உரிமை சார்ந்த விவகாரம் என்று வாதிட்டு, உச்சநீதிமன்றம் முடிவெடுக்க அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், தமிழக அமைச்சரவையில் ஒருவர் குறித்து பேசியதாக சவுக்கு சங்கரருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தற்போது அந்த அமைச்சர் பதவி இழந்து சிறையில் உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் குண்டர் தடுப்புச்சட்டத்திற்கு எதிரான வழக்கில் உத்தரவு வரும் வரை இந்த இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குண்டர் சட்டத்தில் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி, மற்ற வழக்குகளுக்கு ஜாமீன் பொருந்தாது என்பது நீதிபதிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெற்றதால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.