முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு - சவுக்கு சங்கரை விடாமல் துரத்தும் வழக்குகள் - மீண்டும் கைது!
முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சை பேச்சுக்கு சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர்
வழக்கு பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர், சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதை தொடர்ந்து, அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
முத்துராமலிங்க தேவர்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரால் புதிய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுக்கு சங்கர் யூடியூப் சேனலில் பெலிக்ஸ் ஜெரால்டு என்பவருடன் பேசியிருந்தார். அப்போது அவர் முத்துராமலிங்க தேவர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தற்போது முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய வழக்கில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சவுக்கு சங்கரை அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்னதாக சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனால் நேற்று சென்னை புழல் சிறைக்கு சென்ற கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை கைது செய்தததற்கான ஆவணங்காளை காட்டி சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்தனர். அதன்பிறகு அவரை நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்திய போலீசார் கோவை சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.