மாசம் 2 விசிட்; நடிகைக்கு துபாயில் 50 கோடிக்கு வீடு - உதயநிதியின் பரிசு..பகீர் தகவல்
பிரபல நடிகை ஒருவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 50 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, சினிமாவில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கி இருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின்.
இருப்பினும் அவ்வப்போது நல்ல படங்களை பாராட்டி அவர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். மக்கள் பணி பெரிதாக இருக்கும் நிலையில், சினிமாவிற்கு விமர்சனம் எழுதி கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவர் மீது குற்றசாட்டுகளை அடுக்கிய வண்ணமே உள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, அவர் மீது அரசியல் ரீதியிலான கடும் விமர்சனங்களை தொடர்ந்து வைத்து கொண்டே இருக்கின்றார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.
நடிகைக்கு...
அவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் மீது வைத்துள்ள விமர்சனம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி குறித்து பேசும் போது சவுக்கு சங்கர், துபாயில் 50 கோடி ரூபாய்க்கு லூலூ மால் ஓனரின் வீட்டின் அருகிலேயே வாங்கி கொடுத்துள்ளார் உதயநிதி என்றும் அந்நடிகை மாதத்திற்கு 2 முறை தமிழகம் வந்து செல்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அப்பேட்டியில் அந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தான் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அண்மையில் திரிஷா குறித்து முன்னாள் அதிமுகவின் நிர்வாகி பேசிய கருத்துக்கள் பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அதற்கு சவுக்கு சங்கரின் கருத்துக்கள் ஒன்று சிறிதும் சளைத்தவை அல்ல என்று சமூகவலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.