காட்டுப்பன்றியிடம் சிக்கிய மகளை உயிரைவிட்டு காப்பாற்றிய தாய் - உருக்கமான நிகழ்வு
மகளை காப்பாற்றுவதற்காக காட்டுப் பன்றியுடன் சண்டையிட்டு தாய் உயிரிழந்துள்ளார்.
பாசப்போராட்டம்
சத்தீஸ்கர், தெனியமார் கிராமத்தை சேர்ந்தவர் துவாஷியா(45). இவரது மகள் ரிங்கி(11). இருவரும் பண்ணை வேலைக்காக அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு துவாஷியா மண்ணை தோண்டிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் கூட்டமாக சில காட்டுப்பன்றிகள் கடந்து சென்றுள்ளன. மாடுகள் என நினைத்து தனது வேலையை தொடர்ந்துள்ளார். அதில் திடீரென ஒரு காட்டுப் பன்றி மகளை தாக்க பாய்ந்துள்ளது. இதை பார்த்த தாய் குறுக்கே பாய்ந்துள்ளார்.
உயிரைவிட்ட தாய்
தொடர்ந்து, தனது கையில் இருந்த கோடாரியுடன் போராடியுள்ளார்.இந்த சண்டையின் போது காட்டுப்பன்றி தனது கூரிய தந்தங்களை கொண்டு அவரை தாக்கியுள்ளது. கடைசியில், தனது கோடாரியால் காட்டுப்பன்றியின் கழுத்தில் குத்தி வீழ்த்தியுள்ளார். இதனால் மகள் எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பினார்.
ஆனால், தாக்குதலால் படுகாயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் அவரது உடலை மீட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தற்போது அந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.