ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு - நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

Telangana Saudi Arabia Accident Death
By Sumathi Nov 18, 2025 05:58 PM GMT
Report

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து விபத்து

தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.

saudi arabia

அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதீனா அருகே உள்ள முப்ரிஹாத் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த எண்ணெய் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

ஒரே நேரத்தில் 4 நகரங்கள் டார்கெட் - கார் குண்டு வெடிப்பில் பகீர் தகவல்

ஒரே நேரத்தில் 4 நகரங்கள் டார்கெட் - கார் குண்டு வெடிப்பில் பகீர் தகவல்

18 பேர் பலி 

இதில், பேருந்தில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு - நெஞ்சை உலுக்கிய சம்பவம்! | Saudi Bus Crash 18 Members Hyderabad Family Died

எனினும் இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.