4 லட்சம் கோடியில் கட்டப்படும் உலகின் மிக பெரிய கட்டிடம் - எங்கு தெரியுமா?

Dubai Saudi Arabia World
By Karthikraja Oct 28, 2024 03:30 PM GMT
Report

4 லட்சம் கோடி செலவில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய கட்டிடம் குறித்து காணலாம்.

சவுதி அரேபியா

தற்போது உலகின் உயரமான கட்டிடமாக துபாயில் உள்ள புர்ஜ் புர்ஜ் கலீபா இருந்து வருகிறது.

the mukkab உலகின் மிக பெரிய கட்டிடம்

இந்நிலையில் உலகின் மிக பெரிய கட்டிடத்தை கட்டும் பணியில் சவுதி அரேபியா இறங்கியுள்ளது. இந்த கட்டிடத்திற்கு தி முகாப்(The Mukkab) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

610 கிலோ to 63 கிலோ - உலகின் அதிக எடை கொண்ட மனிதர் ஃபிட் ஆனது எப்படி?

610 கிலோ to 63 கிலோ - உலகின் அதிக எடை கொண்ட மனிதர் ஃபிட் ஆனது எப்படி?

தி முகாப்

தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் புதிய முராபா(New Murabba) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நகரின் மையப்பகுதியில், தி முகாப் கட்டப்பட உள்ளது. 

inside the mukkab

இந்த முகாப் கட்டிடத்தை சவுதி அரேபியாவின் நியூ முராபா டெவலப்மென்ட் கம்பெனி என்ற நிறுவனம் கட்டவுள்ளது. இந்த கட்டிடம் 50 பில்லியன் டாலர்(இந்தியா மதிப்பில் 4 லட்சம் கோடி) செலவில் 400 மீட்டர் நீளம், 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலத்தில் கன சதுர வடிவில் கட்டப்பட உள்ளது.

புதிய முராபா

புதிய முராபா நகரம், 2.5 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். இதில் 104,000 குடியிருப்புகள், 9,000 விடுதி அறைகள், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடம், 6.2 லட்சம் சதுர மீட்டர் ஓய்வு மையங்களுக்கான பகுதி மற்றும் 18 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு சமுதாய வசதிகள் இருக்கும். 

நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட 20 மடங்கு பெரிய கட்டிடமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த புதிய நகரின் கட்டுமான பணிகள் 2030ம் ஆண்டிற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.