வரலாற்றில் முதல்முறை - மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அழகி!
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதன்முறையாக சவுதி பங்கேற்கவுள்ளது.
மிஸ் யுனிவர்ஸ்
பிரபஞ்சத்திலேயே அழகி என்ற பட்டத்தை வெல்லும் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறுவது வழக்கம். இதில் பல முக்கிய நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டு அவர்கள் திறமைகளை காட்சிப்படுத்துவார்கள்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா சார்பில் 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) கலந்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி பங்கேற்பு
சவுதியில் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை, ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரியாத்தில் பிறந்த ரூமி, மிஸ் சவுதி அரேபியா பட்டம் வெற்றவர். மேலும், மிஸ் மிடில் ஈஸ்ட், மிஸ் அரபு உலக அமைதி 2021 மற்றும் மிஸ் உமன் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.