21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை கைப்பற்றிய இந்தியா அழகி ஹர்னாஸ் சாந்து

india--universe-degree-harnas-santhu
By Nandhini Dec 13, 2021 04:27 AM GMT
Report

பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். 

இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற இந்த மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டியில், பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து “மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் கைப்பற்றியிருக்கிறார். 

சுமார் 80 பேர் கலந்து கொண்ட இந்தப்போட்டியில், மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தட்டிச் சென்றிருக்கிறார். இவர் ‘மிஸ் சண்டிகராக’ கடந்த 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேலும், பல பட்டங்களையும் இந்தியாவில் இவர் வென்றுள்ளார். ஏற்கெனவே, இந்தியாவின் லாரா தத்தா என்பவர் கடந்த 2000ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிலையில், தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு இந்தியப் பெண்ணான ஹர்னாஸ் இப்பட்டத்தை வென்றிருக்கிறார்.

கடந்த முறை மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெர்சியாவிடமிருந்து இப்பட்டத்தை ஹர்னாஸ் தட்டிச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை கைப்பற்றிய இந்தியா அழகி ஹர்னாஸ் சாந்து | India Universe Degree Harnas Santhu

21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை கைப்பற்றிய இந்தியா அழகி ஹர்னாஸ் சாந்து | India Universe Degree Harnas Santhu