மேகவெடிப்பு: கொட்டித்தீர்க்கும் கனமழை - நாடே நீரில் முழ்கும் அபாயம்!
சவுதியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேகவெடிப்பு
சவுதி அரேபியாவின் மெக்கா பிராந்தியத்தில் உள்ள ஜெத்தா, ராபிக், க்ஹூலைஸ் ஆகிய பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மேகவெடிப்பு காரணமாக 10மணி நேரத்தில் 246மி.மீ மழை பெய்துள்ளது.
இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
இதன் விளைவாக ஜெத்தா விமான நிலையத்திற்கு வர வேண்டிய பல விமானங்கள் தாமதமாகும் நிலை ஏற்பட்டது. சில விமானங்கள் 5 மணி நேரம் வரையிலும் தாமதமானதாகக் கூறப்படுகிறது.
#BREAKING: Jeddah, Saudi Arabia drowns in flood after 246mm of rainfall in span of 10 hours.#Jeddah #KSA #جدة_الأن #جدة #مكة_المكرمة #SaudiArabia #FloodsInSaudiArabia pic.twitter.com/JILHR491Om
— JUST IN | World (@justinbroadcast) November 24, 2022
மேலும், மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.