இந்த நாட்டில் ஒரு நதி கூட இல்லை என்றால் நம்பமுடியுமா! எது தெரியுமா?
Saudi Arabia
By Sumathi
ஒரு நதி கூட இல்லாத நாடு குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது. இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி தண்ணீருக்காக செலவிடப்படுகிறது.
இங்கு ஆறுகளே இல்லை. ஆனால், 2 கடல்களால் சூழப்பட்டுள்ளது. ஆறுகள் இல்லாததால், சவுதி அரேபியாவில் கிணறுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
நதி, ஏரி கிடையாது
மேலும், கடல் நீர் தான் குடிப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. எனவே, இது அங்கு விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. சூழப்பட்டுள்ள இரண்டு கடல்களும் சவுதி அரேபியாவிற்கு வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இங்கு அதிக மழை இல்லை. ஆனால் பணக்கார நாடுகளில் ஒன்றாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.