சவுதி அரேபியாவில் திறக்கப்படும் முதல் மதுபானக் கடை - ஆனால் அவர்களுக்கு மட்டும்தான்!
சவுதி அரேபியா
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இஸ்லாத்தில் மது அருந்துவது செய்யப்பட்டுள்ளதால், சவுதி அரேபியாவில் மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
அங்கு மது அருந்துபவர்களுக்கு கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறை போன்ற தண்டனைகள் வழங்கப்படும். மேலும், வெளிநாட்டவர் என்றால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
மதுபானக் கடை
இந்நிலையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடை திறக்கப்படவுள்ளது. அந்நாட்டை சுற்றுலா மற்றும் வணிக தளமாக மாற்றும் நோக்கில், சவுதி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்கள் மதுவை பெறவேண்டும் என்றால், இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, அனுமதி பெற்று, மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.