வாட்டிவதைக்கும் வெயில்; 90 இந்தியர்கள், 550 ஹஜ் யாத்ரீகர்கள் மரணம் - பரபர தகவல்!

Saudi Arabia Death
By Sumathi Jun 20, 2024 06:20 AM GMT
Report

வெப்பத்தின் தாக்கத்தால் இந்தியர்களில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் வெப்பம்

புனித ஹஜ் யாத்திரைக்காக இஸ்லாமிய மக்கள் ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம்.

haji

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

மக்களே கவனம்; வெப்ப அலை வீசும் - அதிக வெப்பத்தில் முதல் இடம் எதற்கு தெரியுமா?

மக்களே கவனம்; வெப்ப அலை வீசும் - அதிக வெப்பத்தில் முதல் இடம் எதற்கு தெரியுமா?

 ஹஜ் யாத்திரை

மெக்காவில் அல் ஹராம் பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சவுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

pilgrims

இதுவரை சுமார் 645 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹஜ் புனித யாத்திரைக்கு விசா எடுக்க செலவிட முடியாத மக்கள், முறைப்படி பதிவு செய்யாமல் பல்வேறு வழிகளில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதும் உயிரிழப்புக்கு காரணம்.

முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் சவுதி அரசு ஏற்பாடு செய்கிறது. முறைப்படி பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருந்த காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாதது போன்ற பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.