அமைச்சர் என்னை அடிக்கல்லன்னு சொல்லுங்க... - சொல்லிக்கொடுத்த நபர் - வைரலாகும் வீடியோ

Sattur Ramachandran
By Nandhini Jul 13, 2022 11:52 AM GMT
Report

அமைச்சர் பேப்பரால் அடித்த வீடியோ வைரல்

மனு கொடுக்க வந்த தொகுதி மக்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேப்பரால் அடித்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், “விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை தமிழக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேப்பரால் அவர் தலையில் அடித்தார். இது குறித்து வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், பலர் இவரின் செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

Sattur Ramachandran

அண்ணாமலை கண்டனம்

அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும்.. அப்படியில்லையென்றால், அவரது வீட்டை தமிழக பாஜகவினர் முற்றுகையிடுவர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.

சொல்லிக்கொடுத்த நபர்

இந்நிலையில், இது குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நிருபர்கள் அடிவாங்கிய அந்த தாயிடம் பேட்டி எடுக்கும்போது, அந்த கூட்டத்தில் இருந்தவர், அமைச்சர் என்னை அடிக்கவில்லை... மனு கொடுத்தோம்.. உடனே ஆர்டர் போட்டுவிட்டார். என்னை சும்மாதான் தலையில் தட்டினார் என்று கூறசொல்கிறார். அதற்கு அந்த தாய் எனக்கு தலைசுற்றுகிறது என்று கூறுகிறார்.

தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.