கள்ளக்குறிச்சியில் சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல்? வெளியான அதிர்ச்சி வீடியோ
கள்ளக்குறிச்சி விவகாரம்
தமிழகத்தை உலுக்கியுள்ள கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயம் மரணங்கள் தேசிய தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று அங்கு முகாமிட்டு, பாதிப்படைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழக அரசு நேற்று இழப்பீடு தொகை அறிவித்த நிலையில், அதனை இன்று சட்டப்பேரவையில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நாடு உற்று நோக்கும் சம்பவமாக இச்சம்பவம் மாறியிருக்கும் சூழலில், பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
தாக்கப்பட்ட சாட்டை
அப்படி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அண்மையில், கருணாபுரம் சென்றுள்ளார். ஆறுதல் கூற வந்தவரை சுற்றிவளைத்த மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
அந்த வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பு வரை அதிகமாக சென்றது. இதன் காரணமாக அந்த இடத்தில் சற்று நேரம் பெரும் சலசலப்புகள் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் .. pic.twitter.com/E8CrZMDz7d
— கபிலன் (@_kabilans) June 21, 2024
ஆளும் கட்சிக்கு எதிராக வீடியோ வெளியிட்டதன் காரணமாக, இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.