கொல்லப்பார்க்கிறார்கள் - எனக்கு பாதுகாப்பில்லை!! அரசு மீது சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு
நேற்று போலீசாரால் கைதான நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீது நீதிமன்ற தாக்கல் செய்ய நீதிபதி மறுத்துள்ளார்.
சாட்டை துரைமுருகன்
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைதான அவருக்கு நீதிமன்றம் காவல் பிறப்பிக்க, நீதிபதி மறுப்பு தெரிவித்ததன் அடிப்படையில், வெளியே வந்தார் சாட்டை துரைமுருகன். செய்தியாளர்களை சந்தித்த சத்தை துரைமுருகன் பேசும் போது,
கொல்ல...
திமுக அரசுக்கு எதிராக பேசும் நபர்களை நசுக்க பார்க்கிறது. அதிமுகவினர் பல ஆண்டுகளாக பாடும் பாடலை மேற்கோள் காட்டியே விக்கிரவாண்டியில் நான் பேசினேன். நீதிமன்றத்தில் இது புனையப்பட்ட வழக்கு என எடுத்துரைத்தோம்.
நடுநிலையோடு செயல்பட்ட நீதிபதி நீதிமன்ற காவலை நிராகரித்து விட்டார். தென்காசியில் நான் பதுங்கவில்லை, கோவிலுக்கு சென்றேன். வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி போலீசார் என்னை அழைத்து வந்தார்கள்.
வந்த ஓட்டுநர் மது போதையில் தூக்க கலக்கத்தில் இருந்தார். விபத்து ஏற்பட்டு கார் சேதமாகியுள்ளது.. என்னை கொல்ல திமுகவினர் நினைக்கிறார்கள். இந்த அரசாங்கத்தில் என் உயிருக்கு பாதுகாப்பில்லை.