சூரிக்கு உதவி செய்யப்போய் எனக்கு இப்படி நடந்துருச்சு; இனி அவ்வளவுதான் - சசிகுமார் பளீச்!
நடிகர் சூரி குறித்து கருடன் திரைப்பட வெற்றிவிழாவில் நடிகர் சசிகுமார் பேசியுள்ளார்.
கருடன்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கருடன். இந்த படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கருடன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
சசிகுமார்
இதில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார் "இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், இயக்குநரும்தான். இந்த படத்தில் சூரிக்காக தான் நடித்தேன். உதவி செய்யப்போய்.. அது எனக்கு பெரும் உதவியாக மாறி நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது இத்திரைப்படம்.
பரோட்டா சூரி, காமெடி நடிகர் சூரி என்ற பெயரையெல்லாம் மாற்றி, கதைநாயகனாக மாறியிருக்கிறார். சூரி 'கதைநாயனாக' இருக்கும் வரை அவருக்கு வெற்றிக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். 'கதாநாயகனா' மாறிவிட்டால் அவ்வளவுதான். அதனால், கதைநாயகனாகவே அவர் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.