பாஜக - ஆருத்ரா பற்றி கேட்டால்..அதிபுத்திசாலி அண்ணாமலை பதிலளிக்கவில்லை!! சசிகாந்த் செந்தில்

Indian National Congress Tamil nadu BJP K. Annamalai K. Selvaperunthagai
By Karthick Jul 11, 2024 04:36 AM GMT
Report

திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், தமிழக பாஜக மற்றும் அண்ணாமலை ஆகியோரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக சசிகாந்த் செந்தில் எக்ஸ் தளப்பக்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில்,

Sasikanth Senthil

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்ன விலை என கேட்கும் அதிபுத்திசாலி அண்ணாமலை, ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டால் அதற்கு பதிலளிக்க முடியாமல் தனிமனித தாக்குதலை நடத்துகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி குறைகூறும் அண்ணாமலை இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள மிக மோசமான பிரிவுகளான

1. IPC 506

கிரிமினல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

2. IPC பிரிவு-153A/1

வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீவைத்தல், வெடிபொருள் பயன்படுத்துதல், சதி செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள்,

3. IPCபிரிவு-153B/ 2

இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இனம், மொழி, பிறந்த இடம், வசிப்பிடம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல்    

இந்த சின்ன பையன் அவரை என்ன செய்யுறான்'னு பாருங்க!! ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சவால்

இந்த சின்ன பையன் அவரை என்ன செய்யுறான்'னு பாருங்க!! ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சவால்

4. IPC பிரிவு-500

அவதூறுக்கான தண்டனை தொடர்பான குற்றச்சாட்டுகள்

5. IPC பிரிவு-503/1

குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

6. IPC பிரிவு-504/1

அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் பேசுதல், செயல்படுதல், வேண்டுமென்றே அவமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள்  

7. IPC பிரிவு-427

ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தல், தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள்

8. IPC பிரிவு-499

அவதூறு செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

9. IPC பிரிவு-188

பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை தொடர்பான குற்றச்சாட்டுகள் 

என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter'

"அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா?

Amar prasad reddy and Annamalai

பாட்டி வடை சுட்ட கதை சொல்லாமல் ஆருத்ராவிற்கும் பா.ஜ.க மற்றும் அமர்பிராத் ரெட்டி, R.K. சுரேஷ் மற்றும் ரவுடி ஆற்காடு சுரேஷ்'கும் உள்ள தொடர்பு குறித்து பதில் சொல்லுங்க சார்.

சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கு        

 காந்திய வழியில் செல்பவர்கள் கிரிமினல்களாகத் தான் தெரிவார்கள்! என பதிவிட்டுள்ளார்.